/ 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்க...

'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்க...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று தினங்களுக்கு மேல் வெறுத்து, ஒருவர் மற்றவரை சந்தித்தும் ஸலாம் கூறாமல், கதைக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். பகைத்துக்கொண்ட அவ்விருவரில் மிகவும் சிறப்புக்குரியர் தனது சகோதரனுடனான மனவெறுப்பை அகற்றிக்கொள்வதற்காக ஸலாம் கூறுவதில் முந்திக்கொண்டவராவார். இங்கு ஹஜ்ர்- வெறுத்தல்-புறக்கணித்தல்- என்பது ஒருவரின் சொந்த நலனுக்காக வெறுப்பதைக் குறிக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் உரிமையுடன் தொடர்புடைய, பாவிகள், பித்அத் செய்வோர் தீய நண்பர்கள் ஆகியோரை வெறுத்து நடப்பதில் குறிப்பிட்ட கால வரையறை கிடையாது. காரணம் குறிப்பிட்ட நலனானது புறக்கணித்தல் என்பதுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட இப்பாவங்கள் எப்போது அவர்களைவிட்டு நீங்கி விடுகிறதோ அப்போது வெறுத்து நடத்தல் என்ற விடயமும் நீங்கிவிடுகிறது.

Hadeeth benefits

  1. மனித இயல்பைக் கருத்திற் கொண்டு மூன்று நாட்கள், அதை விடக் குறைந்த நாட்கள் வெறுத்திருக்க முடியும் என்ற அனுமதி இந்த ஹதீஸிலிருந்து பெறப்படுகிறது, எனவே அந்த அறிகுறி நீங்கிவிடும் என்பதற்காக வெறுப்பை கைவிடுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைவிடுகையில் அவறுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.
  2. ஸலாம் கூறுவதன் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது, இது உள்ளத்தில் இருக்கும் மனக்கசப்புகளை போக்குவதுடன், நேசத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றது.
  3. சகோதரத்துவம் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இணக்கப்பாடு ஆகியவற்றில் இஸ்லாம் அதீத ஆர்வம் கொண்டிருத்தல்.