இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சொற்பகால தற்காலிக இன்பமாகும். பின்னர் அவை அழிந்துவிடும் எனவும் அவ்வாறான இன்பங்களில் மிகவும் சிறப்புக்குரியது ஸாலிஹான மனைவ...
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடு...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து இன்னொரு பகுதியை விட்டுவிடுவதை தடுத்தார்கள்.
இந்தத் தடையானது ஆண்களில் சிறார்கள்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'.
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுகிறார்கள். அத்துடன் அதனை கத்தரிக்காது விட்டுவிடுவதை எச்சரிப்பதோடு அதனை...
அப்துல்லாஹ் இப்னு அம்ர்; ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கெட்ட மனிதராகவோ, கெட்ட பேச்சுக்கள் பேசுகின்...
கெட்ட, அசிங்கமான பேச்சுக்கள் பேசுதல், தீய, அசிங்கமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாட்டில் இருக்கவில்லை, அத்த...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்ப...
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நற்பண்புள்ள ஒரு அடியான் தனது நற்பண்பின் மூலம் பகல் முழுதும் தொடரந்தும் நோன்பு நோற்று, இரவில் நின்று...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: 'இவ்வுலகம் (முழுவதும்) தற்காலிக இன்பமே, இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே'.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள்: 'பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர், தங்களின் மனைவியரிடம் சிறந்தவர்'.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்'. என்றார்கள் மேலும் நரகத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் நாவும் மறையுறுப்பும் என்றார்கள்.
ஸஃத் இப்னு ஹிஷாம் இப்னு ஆமிர் அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் : விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடுகள் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்று கேட்டதற்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா 'நீர் அல்குர்ஆனை ஓதுவதில்லையா?' என வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள்; 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்.
ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து இரண்டு விடயங்களை மனனமிட்டிருந்தேன் எனக் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ், செய்யும் காரியங்கள் அனைத்தையும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்யுமாறு பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொலை செய்தால், அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் ஒருவர்; தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். அதன் மூலம் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள்; (குறையுங்கள்).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது. யார் பிறருக்கு தீங்கிழைக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் மிகப்பெரும் தண்டனையை வழங்குவான். யார் எவ்வித நியாயமுமின்றி பிறறை சிரமப்படுத்துகிறானோ அவனுக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான் '.