/ 'நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதியாக நடக்கக் கூடியவர்கள் உயர்ந்தோனாகிய அர்ரஹ்மானின் வலப்புறத்திற்கு பக்கமாக அவனிடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் அவனின் இரு கைகளும் வலக்கரமாகும்'...

'நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதியாக நடக்கக் கூடியவர்கள் உயர்ந்தோனாகிய அர்ரஹ்மானின் வலப்புறத்திற்கு பக்கமாக அவனிடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் அவனின் இரு கைகளும் வலக்கரமாகும்'...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதியாக நடக்கக் கூடியவர்கள் உயர்ந்தோனாகிய அர்ரஹ்மானின் வலப்புறத்திற்கு பக்கமாக அவனிடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் அவனின் இரு கைகளும் வலக்கரமாகும்'
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தமது ஆட்சி, அதிகாரத்திற்குக் கீழிருக்கும் மக்கள் மத்தியில் நீதியாகவும், சத்தியத்தை கொண்டும்; தீர்ப்புச் செய்வோருக்கு கிடைக்கும் வெகுமதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்நபிமொழியில் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் ஒளியினாலான உயர்ந்த இருக்கைகளில், மேடைகளில் வீற்றிருப்பார்கள். இது அவர்களை மறுமையில் கௌரப்படுத்துவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள மிகப்பெரும் சன்மானமாகும். இந்த மேடைகள் அர்ரஹ்மானாகிய அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் காணப்படும். ஆனால் அவனின் இரு கைகளும் வலப்பக்கமாகும்

Hadeeth benefits

  1. நீதம் செலுத்துவதன் சிறப்பும், அதற்கான ஊக்குவிப்பும் இந்நபிமொழியில் உள்ளது.
  2. நீதி என்பது பொதுவானது மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் மக்களிடையே உள்ள தீர்ப்புகள், மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான நீதி மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.
  3. மறுமையில் நீதம் செலுத்துவோரின் தரம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
  4. மறுமையில் தத்தமது நற்செயல்களுக்கு ஏற்ப விசுவாசிகளின் தரங்களில் ஏற்றத் தாழ்வுண்டு.
  5. பிரச்சார வழிமுறையில் பின்பற்ற வேண்டிய உத்திகளுள் ஆர்வமூட்டல் என்பது ஒரு வழிமுறையாகும். ஏனெனில் அது அழைக்கப் படுபவரை வணக்கத்தில் ஈடுபட ஆர்வமூட்டுகிறது.