- இஸ்லாம் நற்பண்புகளை நெறிப்படுத்துவதிலும் அதனைப் பரிபூரணப்படுத்துவதிலும் அதிக கரிசணை காட்டியிருத்தல்.
- இந்த ஹதீஸ் நற்பண்புகளின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அதாவது நற்பண்புகள் மூலம் அடியான் நோன்பாளியினதும் இரவில் நின்று வணங்குவோனினதும் அந்தஸ்தையும் அடைந்து கொள்கிறான்.
- பகலில் நோன்பு நோற்பதும் இரவில் நின்று வணங்குவதும் மனதுக்கு சிரமமான மகத்தான இரு பெருங்காரியங்களாகும். ஆகவே நற்பண்புள்ள ஒரு அடியான் தன்னை நல்ல பண்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் மேற்படி இரண்டு வணக்கங்களின் அந்தஸ்த்தை அடைந்து கொள்கிறான்.