/ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்); மிக்கவராக இருந்தார்கள்'...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்); மிக்கவராக இருந்தார்கள்'...

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்); மிக்கவராக இருந்தார்கள்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

மனிதர்களில் நல்லொழுக்கத்தில் பரிபூரணமானவர்களாகவும் ஒழுக்க சீலராகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தார்கள். அழகிய வார்த்தை பேசுதல், நன்மை செய்தல், முகமலர்ச்சியுடன் இருத்தல், (இன்முகம்),மற்றவருக்கு தொல்லை கொடுக்காது இருத்தல், பிறரின் அசௌகரியாமான நடவடிக்கைளை தாங்கிக் கொள்ளல் போன்ற அனைத்து அழகிய குணங்களுக்கும், பண்பாடுபாடுகளுக்கும் முன்னுதாரணமாக அவர்களே திகழ்ந்தார்கள். இதில் அவர்களை முந்தியவர்கள் யாரும் கிடையாது.

Hadeeth benefits

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பரிபூரண நற்குணமுடையவர்களாக திகழ்ந்தார்கள்.
  2. நற்குணத்தின் உயர் முன்மாதிரி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
  3. நற்குணங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றி நடக்குமாறு ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.