/ 'இவ்வுலகம் (முழுவதும்) தற்காலிக இன்பமே, இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே'

'இவ்வுலகம் (முழுவதும்) தற்காலிக இன்பமே, இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: 'இவ்வுலகம் (முழுவதும்) தற்காலிக இன்பமே, இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சொற்பகால தற்காலிக இன்பமாகும். பின்னர் அவை அழிந்துவிடும் எனவும் அவ்வாறான இன்பங்களில் மிகவும் சிறப்புக்குரியது ஸாலிஹான மனைவியே எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவித்துள்ளார்கள். ஸாலிஹான அவனின் மனைவியை அவன் பார்த்தால் அவனை அவள் சந்தோசப்படுத்துவாள். அவளுக்கு ஏதாவது ஒரு காரியத்தை செய்து தருமாறு கட்டளையிட்டால் அவனுக்கு கட்டுப் படுவாள், அவன் வீட்டில் இல்லாத போது தன்னையும் கணவனின் சொத்துக்களையும் பாதுகாப்பாள்.

Hadeeth benefits

  1. அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஹலாலாக்கியுள்ள (அனுமதித்துள்ள) நல்லவற்றை வீண்விரயமோ, பெருமையடித்தலோ இன்றி அனுபவிப்பதற்கு அனுமதியுண்டு.
  2. நல்ல பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுப்பதை ஊக்குவித்தல், ஏனெனில் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் விடயத்தில்; கணவனுக்குத் துணையாக இருப்பாள்.
  3. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், அதற்குத் துணையாகவும் பயன்படுத்தப்படும் பொருளே இவ்வுலகில் மிகப் பயனுள்ளதாகும்.