- செய்த தீங்கை விட அதிகமாகப் பழிதீர்ப்பது தடுக்கப்பட்டிருத்தல்.
- தீங்கை ஏற்படுத்தக் கூடிய எதனையும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடவில்லை.
- தனக்கோ,பிறருக்கோ வார்த்தை, செயல், செய்யாமல் விட்டுவிடுவதல் போன்றன மூலம் தீங்கிழைப்பது தடுக்கப்பட்டிருத்தல்.
- செயலின் அளவுக்கேட்பவே கூலி கிடைக்கும். எனவே யார் தீங்கிழைத்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவனை தண்டிக்கிறான். யார் சிரமப்படுத்திக்கொள்கிறாரோ அவருக்கு சிரமத்தைக் கொடுக்கிறான்.
- 'அல்லரரு யுஸாலு' (தீங்கு நீக்கப்படவேண்டும்) என்பது மார்க்க சட்டவாக்க விதிகளில் ஒன்றாகும், எனவே இஸ்லாமிய மார்க்கமானது தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பதை அங்கீகரிக்காது. அதனை வன்மையாக கண்டிக்கிறது.