- அநீதிக்குள்ளான ஒருவன் தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக மார்க்க விதிமுறைப்படி, சட்டபூர்வமான வழக்குகளின் அடிப்படையில் விவாதிப்பதில் ஆட்சேபனையில்லை, இது தடுக்கப்பட்ட தர்க்கங்களில் நுழைய மாட்டாது.
- தர்க்கம் செய்வது, சச்சரவுகளில் ஈடுபடுவது நாவின் விபரீதச் செயல்களாகும், இது முஸ்லிம்களுக்கு மத்தியில் பகைமையையும் பிரிவிணையையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்து விடும்.
- சத்தியத்திற்காக நல்ல முறையில் தர்க்கித்தல் வாதாடுதல் வரவேற்கத்தக்க விடயமாகும். அது சத்தியத்தை நிராகரித்து அசத்தியத்தை நிலைநாட்டுவதற்காக அல்லது எவ்வித அடிப்படையோ ஆதாரமோ இல்லாத ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக தர்க்கம் செய்தால் அது கண்டிக்கத்தக்க தர்க்கமாகும்.