- திருமணம் செல்லுபடியாவதற்கு வலீ (பெண்ணின் பொறுப்பாளர்) இருப்பது நிபந்தனையாகும். அவ்வாறு வலீயில்லாமல் திருமணம் நிகழந்தால், அல்லது பெண் தாமாகவே திருமணம் செய்து கொண்டால் அந்தத் திருமணம் செல்லுபடியாகாது.
- வலீ என்பவர் மணப்பெண்ணுக்கு மிக நெருக்கமான உறவைக்கொண்ட ஆண்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு மிகநெருங்கிய உறவுக்காரர் இருக்கும் போது தூர உறவினர் பொறுப்பாக நிற்க முடியாது.
- புத்தி சுயாதீனமுள்ள, பருவமடைந்த, ஆணாகவும், திருமண நலன்கள் பற்றிய அறிவுள்ளவராகவும் வலீ இருப்பதுடன், மணமகளுடைய அதே மார்க்கத்தைப் பின்பற்றுவராகவும் அவர் இருப்பது இப்பொறுப்பிற்குரிய நிபந்தனைகளாகும். இந்தப் பண்புகளை அவர் கொண்டிருக்காவிட்டால் வலீயாக இருக்கத் தகுதியற்றவராவார்.