/ 'அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும்'...

'அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும்'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும்'.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணை குறித்து இந்த ஹதீஸில் நபியவர்கள் விவரிக்கிறார்கள். ஒரு முஸ்லிம்; அவன் ஆரோக்கியமாக ஊரில் தங்கியிருக்கும் போது நற்செயல்களை செய்வது அவனின் அன்றாட விவகாரமாக இருந்து, பின் அவனுக்கு நியாயமான ஒரு காரணம் (தடங்கள்) ஏற்பட்டு, அவன் சுகயீனமுற்று அதனை செய்வதற்கு இயலவில்லை, அல்லது அவன் பிரயாணத்தில் செல்கிறான் அல்லது இதுவல்லாத வேறு எந்த நியாயமான காரணமாக இருந்தாலும் அவன் ஆரோக்கியமாக ஊரில் -தங்குமிடத்தில் செய்த நன்மைக்கான முழுமையான கூலி எழுதப்படும்.

Hadeeth benefits

  1. அடியார்கள் மீதான அல்லாஹ்வின் விசாலமான அருளினை இந்த ஹதீஸ் பிரதிபலிக்கிறது.
  2. வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமுட்டப்பட்டிருத்தல், மேலும் ஆரோக்கியமும் ஓய்வும் கிடைக்கும் காலப்பகுதியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள தூண்டியிருத்தல்.