- மஸ்ஜிதினுள் நுழையும் போதும், வெளியேறும் போதும் இந்த பிராத்தனையை கூறுவது முஸ்தஹப்பாகும்(வரவேற்கத்தக்கதாகும்).
- இந்த ஹதீஸில் மஸ்ஜிதில் நுழையும் போது அல்லாஹ்வின் அருளையும் வெளியேறும் போது அவனது அருட்கொடையையும் விஷேடமாக குறிப்பிட்டிருப்தற்கான காரணம் பள்ளியினுள் நுழைபவர் அல்லாஹ்வை நெருங்குவதினூடாக சுவர்க்கத்தின் பால் தன்னை நெருக்கிவைக்கக் கூடிய விடயங்களில் ஈடுபடுவதினால் அருளைக் கேட்பது பொருத்தமானது, அதே போன்று பள்ளியிலிருந்து வெளியேறுபவர் அல்லாஹ்வின் அருளில் வாழ்வாதாரத்தைத் தேடி பூமியில் அலைந்து திரிந்து பாடுபடுகிறார். ஆகையால் வெளியேறும் போது அருளைக் கோரியிருப்பது பொருத்தமானது.
- இந்த திக்ருகளை மஸ்ஜிதில் நுழையும் போதும் வெளியேறும் போதும் கூறுதல்.