- சுத்தம் இரண்டு வகைப்படும்; ஓன்று புறச்சுத்தம் இது வுழூ செய்தல் குளித்தல் போன்ற காரியங்களால் ஏற்படுகிறது.இரண்டாவது அகச்சுத்தம் இது ஏகத்துவம், நம்பிக்கை (ஈமான்) நற்செயல் ஆகிய விடயங்களால் ஏற்படுகிறது.
- தொழுகையானது அடியானுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஒளியாக அமையும் என்பதால்,
- தொழுகையைப் கடைப்பிடித்து பேணுவதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது
- தர்மம் ஈமானின் -நம்பிக்கையின் உண்மை நிலையை விளக்கும் ஆதாரமாகும்.
- அல்குர்ஆனை உண்மைப்படுத்தி அதில் உள்ள போதனைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் இந்த ஹதீஸில் குறிப்பிடபட்பட்டிருக்கிறது. ஏனெனில் அல்குர்ஆனை அணுகும் விதத்தில்தான் உமக்கு அது சாதகமாகவோ,எதிரானதாகவோ அமையும்.
- மனதை (வழிப்பாட்டில்) நன்மையான காரியத்தில் ஈடுபத்தவில்லையெனில் உம்மை பாவத்தில் ஆழ்த்தி விடும்.
- ஓவ்வொரு மனிதனும் தன்னை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு) நரகத்தைவிட்டு விடுவித்துக்கொள்ளவும் அல்லது பாவகரியத்தில் ஈடுபட்டு பெரும் நாசத்தை அடையவும் இவ்வுலகில் ஏதோ வகையில் செயல்படுதல் வேண்டும்.
- பொறுமைக்கு சிரமத்தை தாங்குதல், நன்மையை எதிர்பார்த்தல் எனும் பண்புகள் தேவையாகும். பொறுமையை கடைப்பிடிப்பதில் சிரமம் உள்ளது.