/ ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறினால் ஷைத்தான் தனது நண்பர்களிடத்தில் உங்களுக்கு இரவில் தங்குவதற்கான இடமோ இரவுணவோ கிடையாது என்று கூறுகிறான்...

ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறினால் ஷைத்தான் தனது நண்பர்களிடத்தில் உங்களுக்கு இரவில் தங்குவதற்கான இடமோ இரவுணவோ கிடையாது என்று கூறுகிறான்...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்: ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறினால் ஷைத்தான் தனது நண்பர்களிடத்தில் உங்களுக்கு இரவில் தங்குவதற்கான இடமோ இரவுணவோ கிடையாது என்று கூறுகிறான். அந்த மனிதர் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறாது நுழைந்து விட்டால் ஷைத்தான் தனது சகாக்களிடம் உங்களுக்கு தங்குமிடம் கிடைத்துவிட்டது என்று கூறுவான். அதே போல் உண்ணும் போது அல்லாஹ்வை நினைவு கூறாதிருந்தால் (பிஸ்மில் கூறாதிருந்தால்) ஷைத்தான் தனது சகாக்களிடத்தில் உங்களுக்கு தங்குமிடமும் இரவுஉணவும் கிடைத்து விட்டது என்று கூறுவான்'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

வீட்டினுள் நுழையும் போதும் சாப்பிட முன்பும் அல்லாஹ்வை நினைவு கூறுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது 'பிஸ்மில்லாஹ்' என்ற வார்த்தையை வீட்டினுள் நுழையும்போதும் உணவு உண்ண ஆரம்பிக்குபோதும் கூறினால், ஷைத்தான் தனது சகாக்களிடம் இந்த வீட்டுரிமைளார் அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டான் ஆதலால் உங்களுக்கு இரவில் தங்குமிடமோ இரவு உணவோ கிடையாது என்று கூறுவான். அந்த மனிதர் தனது வீட்டினுள் நுழைகையிலும், உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறாதிருந்தால் ஷைத்தான் தன சகாக்களுக்கு உங்களுக்கு இந்த விட்டில் தங்குவதற்கான இடமும், இரவுணவும் கிடைத்து விட்டது என அறிவிப்பான்.

Hadeeth benefits

  1. வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறுவது வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனெனில் அல்லாஹ்வை நினைவு கூறாத வீடுகளில் ஷைத்தான் இரவைக் கழிப்பதோடு அவ்வீட்டாரின் உணவிலும் பங்கு கொள்கிறான் .
  2. ஷைத்தான் ஆதமின் சந்ததியை அவனது செயற்பாடு, நடவடிக்கை மற்றும் எல்லா விவகாரங்களிலும் தருணம் பார்த்து அவதானித்துக் கொண்டிருக்கிறான். அவன் எப்போது அல்லாஹ்வை நினைவுகூறுவதிலிருந்து அலட்சியமாக இருக்கிறானோ அவ்வேளை அவனது இலக்கை அடைந்துகொள்கிறான்.
  3. இறை நினைவு ஷைத்தானை துரத்திவிடுகிறது.
  4. ஓவ்வொரு ஷைத்தானுக்கும் தனது கட்டளைகளை பின்பற்றி நடக்கும் நேசர்களும், ஆதரவாளர்களும் உள்ளனர்.