நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அஸ்ர் தொழுகையை நேர காலத்துடன் நிறைவேற்றுங்...
அஸ்ர் தொழுகையை வேண்டுமென்றே அதற்குரிய நேரத்தை தவிர்த்து பிற்படுத்தி தொழுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். அவ்வாறு பிற்படுத்தி...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்ற மறந்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான எந்த தொழுகையாயினும் அதன் நேரம் கடந்த பின்னும் நிறைவேற்ற மறந்து விட்டால், அவருக்கு ஞாபகம் வரும் வேளை உடன் வ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நயவஞ்சகர்கள் பற்றியும் அவர்கள் ஜமாத் தொழுகைக்கு கலந்து கொள்ளாது சோம்பரித்தனமாக இருப்பதை குறித்தும் இந்த ஹதீஸில் கு...
இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூஇலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறுவார்கள். இதன் கருத்து : யார் அல்லாஹ்வை புக...
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலை...
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, என்ற இஸ்திஃபாரை மீண்டும் மீண்டும் கூறுபவர்களாக இருந்தார்கள்....
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அஸ்ர் தொழுகையை நேர காலத்துடன் நிறைவேற்றுங்கள், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவனின் நற்செயல்கள் அழிந்து விடும்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்ற மறந்துவிடுகிறாரோ அவர் அதனை ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும்; அதற்கான குற்றப்பரிகாரம் அதனைத்தவிர வேறுஒன்றுமில்லை (என்னை நினைவு படுத்த தொழுகையை நிலைநாட்டுவீராக,) (தாஹா :14)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் (ஸுப்ஹ்) ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறி வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு என்னுடன் விறகுக் கட்டைகள் சுமந்த சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என மனம் நாடுகிறது' எனக் கூறினார்கள்.
இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு,
அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது என்று கூறுபவர்களாக இருந்தார்கள்'
(யாஅல்லாஹ்! எங்கள் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமி நிரம்பும் அளவுக்கும்; நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் உனக்கே புகழனைத்தும்.)
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'.
ஹித்தான் இப்னு அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமூஸா அல்அஷ்அரீ -ரழியல்லாஹு அன்ஹு- அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் 'உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி' (நன்மை, தானதருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது) என்று கூறினார். அபூமூஸா -ரழியல்லாஹு அன்ஹு- அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். மீண்டும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போதும் மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), ஹித்தான்! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை. அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றேன் நான். அப்போது மக்களில் ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூஸ-ரழியல்லாஹு அன்ஹு- அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ் ழால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉ செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும், அவர் (இமாம்) ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான்.
மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ஸஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்ம துல்லாஹி வ பரக்கா துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு) ' அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' பொருள் : (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும்-தொழுகைகளும்- பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). புஹாரி முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில்' நிச்சயமாக அல்லாஹ் ' அஸ்ஸலாம் ஆவான்' உங்களில் ஒருவர் தொழுகையில் இறுதி அமர்வில் அமர்ந்தால் 'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று கூறட்டும். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்'.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.என்று -இறுதி தஷஹ்ஹுதின் பின் பிரார்திக்கக் கூடியவராக இருந்தார்கள்: பொருள்: இறைவா! நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகின்; வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும்; பாதுகாப்பு தேடுகிறேன்.
முஸ்லிமின் அறிவிப்பில் : 'உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"நீங்கள் அதிகமாக ஸுஜூத் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும் அல்லாஹ் உங்களின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும்,அதன் மூலம் உங்களின் ஒரு தவறை அழித்து விடாமலும் இருப்பதில்லை."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸௌபான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.
உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு' என்று கூற, நான் அவ்வாறே செய்தேன், அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான் என்று கூறினார்கள்.