/ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு...

இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு, அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது என்று கூறுபவர்களாக இருந்தார்கள்' (யாஅல்லாஹ்! எங்கள் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமி நிரம்பும் அளவுக்கும்; நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் உனக்கே புகழனைத்தும்.)
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூஇலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறுவார்கள். இதன் கருத்து : யார் அல்லாஹ்வை புகழ்கிறானோ அவனுக்கு பதிலளிப்பதோடு அவனின் புகழை ஏற்று அதற்கு கூலியும் வழங்குகிறான் என்பதாகும்'. 'அல்லாஹும்ம ரப்பனாலகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது ' என்பது வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்டவை அவன் நாடிய எல்லாவிடயங்களில் அவனின் புகழ்நிறைந்துள்ளது என்பாகும்.

Hadeeth benefits

  1. தொழுபவர் ருகூஉலிருந்து தனது தலையை உயர்த்தினால் இந்த திக்ரை கூறுவது விரும்பத்தக்கது.
  2. ருகூஉலிருந்து நிலைக்கு வந்த பின் அமைதியாகவும் நேராகவும் இருப்பது தொழுகையில் உள்ள மார்க்க வழிகாட்டலாகும். ஏனெனில் இந்த திக்ரை நிலைக்கு வந்து அமைதியாக இருந்தே ஓத வேண்டும்.
  3. இந்த திக்ர் கடமையான, ஸுன்னத்தான அனைத்து தொழுகைகளிலும் ஓத வேண்டும்.