- பள்ளிவாயிலில் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்ளாதிருப்பதன் விபரீதம் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை.
- நயவஞ்சகர்கள் முகஸ்துதி மற்றும் பிறர் தம்மைப்பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே வணக்கவழிபாடுளில் ஈடுபடுபடுகின்றனர். ஆகையால் மக்கள் அவர்களை காணும் வேளையில் மாத்திரம் தொழுக்காக சமூகமளிப்பர்.
- இஷா, பஜ்ர் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுதனால் பாரிய கூலி கிடைப்பதுடன், தவழ்ந்தாவது சமூகந்தர மிக அருகதையானதே அவ்விரு தொழுகைகளும்.
- இஷா மற்றும் பஜ்ர் தொழுகைகளை பேணி வருவது நயவஞ்சகத்தை விட்டும் பாதுகாப்பாகும். அவ்விரண்டிலும் பின்வாங்குவது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.