- ஷைத்தான் தொழுகையில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடுவதால் தொழுகையில் பணிவு மற்றும் பக்தியுடன் மெய்நிலையில் தொழுவதன் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.
- தொழுகையில் ஷைத்தானின் மனஊசலாட்டம் ஏற்பட்டால் இடது பக்கத்தில் மூன்று முறை துப்பி பாதுகாப்புத் தேடுவது நபி வழிமுறையாகும்.
- ஸஹாபாக்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நபியவர்களிடம் வந்தமை பற்றிய விபரம் இந்த ஹதீஸில் காணப்படுகின்றமை.
- நபித்தோழர்களின் உள்ளங்கள் உயிரோட்டமானவை, அவர்களின் முழு முயற்சியும் மறுமை நோக்கியதாகவே இருக்கும்.