நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'.
விளக்கம்
ஒரு முஸ்லிமுக்கு மிகவும் தேவைப்படுகின்ற, இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய ஐந்து மகத்தான பிரார்தனைகள் உள்ளடங்கிய ஒரு துஆவை தனது தொழுகையில், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓதக் கூடியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திகழ்ந்தார்கள். அதில் நபியவர்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி, அவற்றை மறைத்து, அழித்து விடுமாறும், அருளை நிறைவாகத் தருமாறும், மார்க்கத்தில் சந்தேகங்ள் மற்றும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதை விட்டும், உடலில் நோய் நொடிகளை விட்டும், ஆரோக்கியத்தையும், ஈடேற்றத்தையும் தருமாறும் வேண்டுகிறார்கள். அத்துடன் அல்லாஹ்விடம் சத்தியத்தியத்தைப் பின்பற்றி வாழ்வதற்கும், அதில் நிலைத்திருக்கவும், மேலும் ஈமான், அறிவு, நற்செயல் ஆகிய ரிஸ்கையும் தூய்மையும் ஹலாலும் நிறைந்த செல்வமெனும் ரிஸ்கையும் தருமாறு வேண்டுகிறார்கள்.
Hadeeth benefits
இந்த துஆவை இரண்டு ஸஜ்தாவுக்கிடையிலான இருப்பில் ஓதுவது நபிவழியாகும் .
இம்மை மறுமையின் நலன்களை உள்ளடக்கியுள்ளதால் இந்தப் பிராரத்தனைகளின் சிறப்பு தெளிவானது.
Share
Use the QR code to easily share the message of Islam with others