- அஸ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் பேணித் தொழுவதற்கு ஆர்வமூட்டபட்டுள்ளதுடன் அதற்காக விரைந்து செயற்படுதல் வேண்டும்.
- அஸ்ர் தொழுகையை தொழாது அதற்குரிய நேரத்தை தவறவிடுவது ஏனைய தொழுகைகளை விட்டுவிடுவதை விட மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நடுத்தொழுகை என்று குறிப்பிடப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என கட்டளைப் பிரப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அல்லாஹ்: தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிடுகிறான். (பகரா : 238).