- தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதனை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதிலும் மறதி போன்ற தக்க காரணம் நிமித்தம் நேரம் கடந்து நிறைவேற்றுவதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது எனபதை தெளிவுபடுத்தல்.
- நியாயமான காரணங்கள் இன்றி தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துவது கூடாது.
- தொழுகையை நிறைவேற்ற மறந்தவர் தமக்கு ஞாபகம் வந்த வேளையிலும், தூங்கியவர் எழுந்ததும் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும்.
- தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாயினும் கழாத் தொழுகைகளை விரைந்து உடன் நிறைவேற்றுவது கடமையாகும்.