- இங்கு குறிப்பிடப்பட்ட பாதுகாப்புத் தேடும் பிரார்த்தனையானது பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இம்மை மறுமையின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலும் இது கருத்துச் செரிவுமிக்கதாகவும் காணப்படுகிறது.
- மண்ணறை வேதனை உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.
- சோதனைகளின் அபாயமும், இதிலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடி பிரார்த்திப்பதன் முக்கயத்துவமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளமை.
- தஜ்ஜாலின் வருகை உறுதிப்படுத்தப் பட்டிருப்பதுடன் அவனின் மிகப்பெரும் சோதனையும் குறிப்பிடப்பட்டிருத்தல்.
- இறுதி தஷஹ்ஹூதின் பின் இந்த துஆவை ஓதுவது முஸ்தஹப்பாகும்.
- நல்ல காரியங்களின் பின் இந்த துஆவை ஓதுவது (முஸ்தஹப்பாகும்-) வரவேற்கத்தக்கதாகும்.