- இந்த ஹதீஸ் தஷஹ்ஹுதின் (அத்தஹிய்யாத்தின்) வடிவங்களில்(வார்த்தைகளில்) ஒன்றை தெளிவு படுத்துகின்றமை.
- தொழுகையின் செயல்கள் மற்றும் அதன் வார்த்தைகள் யாவும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவசியமாகும். நபி வழிமுறையில் உறுதிப்படுத்தப்படாத சொல் அல்லது செயலை புதிதாக உருவாக்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை.
- இமாமை முந்திச் செல்வது மற்றும் அதிகம் தாமதமாகி செல்வது கூடாது இமாமை அவரின் செயல்களில் தாமதமின்றி பின்பற்றி செல்வது மார்க்க வழிமுறையாகும்.
- மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைப்பதிலும் மார்க்க சட்டதிட்டங்களை தனது சமூகத்தினருக்குக் கற்றுத் தருவதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கிருந்த கரிசனையை அவர் குறிப்பிட்டார்.
- இமாம் மஃமூமாக இருப்பவருக்கு முன்மாதிரியாவார். ஆகவே தொழுகையின் செயல்சார் விடயங்களில் முந்திச்செல்வதோ அவருடன் ஒன்றாக சேர்ந்து செல்வதோ, தாமதாகிச் செல்வதோ கூடாது. மாறாக இமாம் குறிப்பிட்ட செயலில் நுழைந்துவிட்டார் என்பதை திட்டப் படுத்திக் கொண்டதன் பின் அவர் தனது செயலை ஆரம்பித்துச் செய்தல் வேண்டும். இதில் இத்திபாஉ நபி வழியாகும். அதாவது இமாம் ஒரு செயலை செய்ததன் பின் சற்றும் தாமதிக்காமல் செய்வதiயே இத்திபாஉ என்பது குறிக்கும்.
- தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்துவது அவசியமாகும்.