- அல்லாஹ்வை அவனது ருபூபிய்யத், உலூஹிய்யத் மற்றும் அவனது திருநாமங்கள், பண்புகளைக் கொண்டு விசுவாசம் கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையாகும்.
- ஈமானிற்குப் பிறகு அதில் உறுதியாக இருத்தல், வணக்கவழிபாடுகளை தொடராக செய்தல், அதில் உறுதியாக இருத்தலின் முக்கியத்துவம் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- ஈமான் -அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது- அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய ஒரு பிரதான நிபந்தனையாகும்.
- ஈமான் -அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது- என்பது ஒருவர் ஈமான் கொள்ளவேண்டிய ஈமான் தொடர்பான கோட்பாடுகள் மற்றும் அதன் அடிப்படைகள் மேலும் அது தொடர்பான உளச் செயற்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்குவதுடன் அல்லாஹ்வுக்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பதைக் குறிக்கும்.
- உறுதியாக இருத்தல் என்பது கடமையான விடயங்களை செய்து, தடைசெய்தவற்றை முற்றாக விட்டுவிடுவதன் மூலம் மார்க்கத்தில் உறுதியாக இருத்தல்.