- வுழூவின் ஒழுங்குகள், அதன் ஸுன்னாக்களை கற்பதில் கரிசனை காட்டுவதுடன், அதன்படி செயல்படுவதை ஊக்குவித்தல்.
- வுழுவின் சிறப்பும் அது சிறிய பாவங்களுக்கான பரிகாரமாக அமைந்துள்ளமையும், பெரும் பாவங்களைப் பொருத்தவரை தவ்பா செய்வது அவசியமாகும்.
- பாவங்கள் வெளியேறுவதற்கான நிபந்தனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியது போன்று வுழூவை எவ்வித குறைகளுமின்றி முழுமையாக செய்வதாகும்.
- இந்த ஹதீஸில் பாவங்கள் மன்னிக்கப்படுதல் என்பது பெரும்பாவங்களிலிருந்து விலகி தவ்பா செய்தல் என்ற வரையரைக்குட்பட்ட ஒரு விடயமாகும். இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில் ''உங்களுக்கு தடுக்கப் பட்டவைகளில் பெரும்பாவங்களை விட்டும் நீங்கள் விலகிக் கொண்டால் உங்களை விட்டும் உங்கள் (சிறு) பாவங்களை நாம் அழித்திடுவோம்''. (நிஸா : 31).