அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலல்லம் அவர்கள் உருவச்சிலைகளை எதனையும் விட்டுவைக்காது அதனை நீக்கி அழித்து விடுமாறு தனது தோழர்களை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள்...
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீய சகுணம் பார்ப்பதை எச்சரித்துள்ளார்கள். தீய சகுணம் என்பது பறவைகள், விலங்குகள், மாற்றுத் திறனாளிகள், எண்கள், நாட...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ' பறவைச் சகுனம் பார்ப்பவனும், சகுனம் பார்க்கப்...
'எம்மை சார்ந்ததோர் அல்லர்' என்ற வார்த்தையின் மூலம் நபியவர்களின் சமூகத்தில் உள்ளோர் செய்யும் சில செயற்பாடுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சர...
ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் '{ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ...
மக்காவிற்கு அருகில் அமைந்துள்ள கிராமமான ஹுதைபிய்யாவில் -அன்றிரவு பெய்த மழையைத் தொடர்ந்து- நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுகையை நடாத்தினா...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: '(ஷிர்க்கான வாசகம் மூலம்) மந...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இணைவைப்போடு சம்பந்தப்பட்ட சில விடயங்களை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அவற்றுள் சில பின்வருமாறு: முதலாவது : ம...

அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் (மண்ணறையையும்) தரையுடன் சமப்படுத்தாது விட்டு விடாதீர்!' என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், என மூன்று தடைவகள் கூறினார்கள். எங்களில் இது குறித்த எண்ணம் உடையவர் எவரும் இல்லாமல் இல்லை. எனறாலும்; இதனை அல்லாஹ் தவக்குளின் மூலம் அகற்றி விடுகிறான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ' பறவைச் சகுனம் பார்ப்பவனும், சகுனம் பார்க்கப் பட்டவனும், ஜோசியம் பார்த்தவனும், ஜோசியம் பார்த்துவிடப் பட்டவனும், சூனியம் செய்தவனும், சூனியம் செய்யுமாறு பணித்தவனும் எம்மைச் சார்ந்தவனல்ல, யார் ஒரு ஜோசியனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை மறுத்தவனாவான்'.

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் '{ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: '(ஷிர்க்கான வாசகம் மூலம்) மந்திரித்தல், தாயத்துகள் கட்டுதல் (கணவன் மனைவியர்கிடையே அன்பை ,(ஈர்ப்பை) ஏறபடுத்துவதற்காகச் செய்யும் திவலா (முறை) ஆகியன இணைவைப்பாகும்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியரில் சிலர் அறிவித்துள்ளார்கள் : 'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர், கஃபாவின் மீது சத்தியமாக, இல்லை என்று கூறுவதை கேட்டார்கள் உடனே இப்னு உமர் அவர்கள் கூறினார்கள் இறைவனைத் தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்யப்படக்கூடாது, ஏனென்றால் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன்: 'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்".

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள். மறுமை நாளில் மக்களுக்கு தங்களின் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகையில் முகஸ்துதியாளர்களைப் பார்த்து ' உலகில் யாருக்கு காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் ஏதும் வெகுமதி உள்ளதா என்பதை பாருங்கள் என்று கூறிவிடுவான்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மர்ஸத் அல்கனவீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்.

அல்-இர்பாழ் இப்னு ஸாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு தினம் எழுந்து நின்று உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஓர் உபதேசத்தை செய்தார்கள். அப்போது ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே, இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். அதற்கு நபியவர்கள்: 'அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஒரு அபீஸீனிய அடிமை உங்களுக்குப் பொறுப்பாளராக வந்தாலும், அவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு நீங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்வீர்கள். எனவே, எனது ஸுன்னாவையும் நேர்வழிநடந்த கலீபாக்களின் ஸுன்னாவையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் உங்கள் கடைவாய் பற்களால் பற்றிக்கொள்ளுங்கள்; (அதாவது அதனை உறுதியாக கடைப்பிடித்தொழுகுங்கள்) மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் வழிகேடாகும் (பிழையான வழிகாட்டுதலாகும்.)