/ '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''...

'' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மர்ஸத் அல்கனவீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கப்ரின் மீது உட்காருவதை- அமர்வதை-தடுத்தார்கள். அதே போன்று கப்ரை முன்னோக்கி –அதாவது தொழுபவரின் கிப்லாத் திசையில் கப்ரு இருக்கும் நிலையில்- தொழவேண்டாம் என்றும் தடுத்தார்கள். காரணம் இந்த விடயம் இணைவைப்பிற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்திட வாய்பிருப்பதால் இவ்வாறு செய்வதை தடுத்தார்கள்.

Hadeeth benefits

  1. அடக்கஸ்தளங்ளில் கப்ருகளின் மீதோ அல்லது அவற்றிற்கிடையிலோ அல்லது அதை நோக்கியோ, தொழுவது தடைசெய்யப்பட்டிருத்தல். ஆனால் நபிவழியில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று ஜனாஸாத் தொழுகை நடாத்த அனுமதியுண்டு.
  2. இணைவைப்பின் வாயில்களை அடைத்திட வேண்டும் என்பதற்காக அடக்கஸ்தளங்களில் தொழுவது தடைசெய்யப்பட்டிருத்தல்.
  3. இஸ்லாம் (கப்ருகள்)அடக்கஸ்தளங்கள் விடயத்தில் அளவு கடந்து செல்லுதல், அவமதித்தல் இரண்டையும் தடை செய்துள்ளது. எனவே இதில் எல்லை மீறுவதோ, அலட்சியமாக இருப்பதோ கூடாது.
  4. மரணித்தவரின் ஒரு எழும்பை முறிப்பது அவர் உயிரோடு இருக்கும் போது முறித்துவிடுவதைப் போன்றாகும் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப மரணத்தின் பின்னும் முஸ்லிமின் புனிதத்துவம் பேணப்படுதல்.