- ஸுன்னாவை கடைப்பிடித்து ஒழுகுவதன் முக்கியத்துவம் விபரிக்கப்பட்டிருத்தல்.
- அறிவுரை மற்றும் உள்ளத்தை மென்மைப்படுத்தும் விடயங்களில் கவனம் செலுத்துதல்.
- நபியவர்களின் பின் ஆட்சிப்பொறுப்பேற்று நடாத்திய நேர்வழிமிக்கோரான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரை பின்பற்றி நடக்குமாறு கட்டளையிடப்பட்டிருத்தல்.
- மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படுகின்ற பித்அத்களை தடுத்தல். ஏனெனில் ஒவ்வொரு பித்அத்துக்களும் வழிகேடாகும்.
- பாவகாரியமல்லாத விடயங்களில் முஸ்லிம்களின் தலைமத்துவத்தைப் பொறுப்பேற்று நடாத்துவோருக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைக்கு செவிதாழ்த்தி நடந்து கொள்ளல்.
- எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை பயந்து நடப்பதன் அவசியம் விவரிக்கப்பட்டிருத்தல்.
- இந்த சமூகத்தில் கருத்து முரண்பாடு நிகழும். அவ்வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினதும், நேர்வழி நடந்த கலீபாக்களினதும் வழிமுறையின் பால் மீண்டு செல்வது அவசியமாகும்.