- இணைவைப்பிற்கு வழிவகுக்கும் என்பதினால் உயிருள்ளவற்றிற்கு உருவச் சிலைகள் அமைப்பது ஹராமாக்கப்பற்றிருத்தல்.
- அதிகாரம், சக்தி உள்ளவர்கள் தீமைகளைக் கையினால் தடுப்பது மார்க்கத்தில் உள்ள விடயமாகும்.
- ஜாஹிலிய்யாக் கால அடையாளங்களைக்காட்டும் உருவப் படங்கள் உருவச்சிலைகள் கப்ரின் மீது அமைக்கப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றை நீக்குவதில் நபியவர்கள் கொண்டிருந்த ஆர்வம்.
- குறிப்பு : 1- அனைவரும் இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் இந்த சிலைகளின் தேவை காணப்படாமை.
- 2-இஸ்லாத்தை தழுவிய விக்கிரக வணங்கிகளான அரபுகள் மீண்டும் பழைய நினைவுகளை மீட்டு இணைவைப்பின் பால் மீண்டு செல்லாது தடுப்பதற்காகவே இதனை அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.