- மழை பொழிந்ததன் பின் مُطرنا بفضل الله ورحمته. 'அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறுவது விரும்பத்தக்க விடயமாகும்.
- கோள்களும் நட்சத்திரங்களுமே உண்மையில் மழையை பொழியச்செய்கிறது என்று யார் கூறுகின்றானோ அவன் காபிராவான். இது பெரிய வகை குப்ராகும். அதே போல் யார் ஒருவர் இந்த நட்சத்திரங்களும் கோள்களும் மழை பொழிய காரணமாக இருக்கிறது என்று அவற்றைக் காரணமாக கூறுகிறாரோ அவரும் காபிராவார்.இது சிறியவகை குப்ரில் சேர்க்கப்படும்.
- ஒரு அருளானது அது நிராகரிக்கப்படும் போது அது இறைநிராகரிப்புக்கு காரணமாகவும்,அதற்கு நன்றி செலுத்தப்படும் போது, ஈமானுக்கு -இறைநம்பிக்கைக்கு- காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
- 'இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுவது ஷிர்கிற்கு வழிவகுக்கும் காரணமாக அமைந்துவிடும் என்பதற்காக தடுக்கப்பட்டிருத்தல்.
- அருளை பெறுவதிலும்,தீஙகிலிருந்து பாதுகாப்புப் பெறுவதிலும்; உள்ளம் அல்லாஹ்வுடன் இணைந்திருப்பது அவசியமாகும்.