- கழா கத்ரை (விதியை)ஈமான் கொள்வதும் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பதும்-பொறுப்புச்சாட்டுவது- கடமையாகும். பறவை சகுணம், துற் சகுணம், சூனியம், சாஸ்திரம், இந்த விடயங்களுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் செய்து தருமாறு வேண்டுவதும் ஹராமான விடயமாகும்.
- மறைவான அறிவு உள்ளதாக வாதிடுவது ஓரிறைக் கொள்கையுடன் முரண்படுவதால் அது தடைசெய்யப்பட்டுள்ளது.
- ஜோசியம் பார்ப்பவனை உண்மைப்படுத்துவதும் அவனிடம் செல்வதும் ஹராமாகும். இத்துடன் கையிலும் பீங்கானிலும் ஓதிப்பார்ப்பது, ஒரு விடயத்தை அறிந்து கொள்ள கிரகங்கள் பார்த்து ராசி பலன் பார்ப்பது போன்றவையும் தடுக்கப்பட்ட விடயங்களாகும்.