- ஜோசியமும், ஜோசியம் பார்ப்போரிடத்தில் சென்று மறைவான விடயங்கள் பற்றி விசாரிப்பதும் ஹராமாக்கப்பட்டிருத்தல்.
- பாவச்செயலை செய்தமைக்கான தண்டனையாக சிலபோது மனிதன் செய்த நல்லமல்களுக்கான கூலி தடுக்கப்படலாம்.
- இந்த ஹதீஸில் கையிலும் பீங்கானிலும் ஓதிப்பார்ப்பது, ஒரு விடயத்தை அறிந்து கொள்ள கிரகங்கள் பார்த்து ராசி பலன் பார்ப்பது போன்றனவும் உள்ளடங்குகின்றன. இவையனைத்தும் ஜோசியம் மற்றும் மறைவான விடயத்தை வாதிடுதலில் உள்ளடங்கும் செயல்களாகும்.
- குறிசொல்பவனிடம் செல்பவனுக்கே இந்தத் தண்டனை என்றிருந்தால், குறி சொல்பவனுக்குரிய தண்டனை எப்படியிருக்கும்?
- நாற்பது நாட்களுக்கான தொழுகைகள் செல்லுபடியாகும், அதனால் அதனை மீண்டும் தொழ வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அதற்கு எந்தக் கூலியும் கிடையாது.