- 'மாஷாஅல்லாஹு வஷிஃத' அல்லாஹ்வும் நீயும் நாடியது' என்பது போன்ற அல்லாஹ்வை அடியானுடம் சமப்படுத்தும் வாசகங்களை பயன்படுத்துவது ஹராமாகும். காரணம் இவை சொற்கள் மற்றும் வார்த்தைகள் சார்ந்த இணைவைப்பாகும்.
- 'மாஷாஅல்லாஹு ஸும்ம ஷிஃத' என்பது போன்ற வாசகங்களை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும். காரணம் இதில் ஸும்ம என்ற சொல்லானது மேற்படி ஆபத்தான கருத்தை நீக்கிவிடுகிறது.
- அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் நாட்டசக்தி இருப்பதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துவதோடு அடியானின் நாட்டமானது அல்லாஹ்வின் நாட்டத்தை அடியொட்டியே அமையும் என்பதை தெளிவு படுத்துகிறது.
- அல்லாஹ்வின் நாட்டத்தில் வார்த்தையளவில் கூட படைப்பினங்களை இணையாக்குவது தடுக்கப்பட்டிருத்தல்.
- எல்லா வகையிலும் அடியானின் நாட்டம் அல்லாஹ்வின் நாட்டத்தை ஒத்தது என்று கூறுபவர் மனதால் உறுதியாக நம்பினால் அல்லது அடியானுக்கு என சுயமான நாட்டம் உண்டு என நம்பினால் அது பெரியவகை இணைவைப்பாக அமைந்து விடும். அவ்வாறு இல்லாத நிலையில் அது சிறியவகை ஷிர்க்காக அமைந்து விடும்.