- சகுணம் பார்த்தல் அல்லாஹ் அல்லாத ஒன்றில் உள்ளம் தங்கியிருப்பதால் அது இணைவைத்தலாகும்.
- முக்கிய மார்க்கப் பிரச்சினைகள் தொடர்பாக பல தடவைகள் குறிப்பிடுதலின் அவசியம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை. அவ்வாறு பல தடவைகள் குறிப்பிடுவதன் விளைவாக உள்ளத்தில் ஆழமாகப் பதிவதுடன் மனதில் நிரந்தராமாக இருக்கும்.
- அல்லாஹ்வின் மீது தவக்குள் (முழுமையாக அல்லாஹ்வை சார்ந்திருத்தல்) வைப்பதன் மூலம் சகுணத்தை போக்கிவிட முடியும்.
- அல்லாஹ்வின் மீது மாத்திரம் தவக்குள் -நம்பிக்கை - வைக்க வேண்டும்- எனவும் உள்ளம் அவனுடன் இணைந்திருக்க வேண்டும் எனவும் இந்த ஹதீஸ் வலியுறுத்தியிருத்தல்.