/ 'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள்...

'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள்...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள். மறுமை நாளில் மக்களுக்கு தங்களின் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகையில் முகஸ்துதியாளர்களைப் பார்த்து ' உலகில் யாருக்கு காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் ஏதும் வெகுமதி உள்ளதா என்பதை பாருங்கள் என்று கூறிவிடுவான்'
இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்தின் மீது மிகவும் அதிகமாக பயந்த சிறியவகை இணைவைப்பு முகஸ்துதி பற்றி குறிப்பிடுகிறார்கள் முகஸ்துதி என்பது மக்களின்; புகழை எதிர்பார்த்து செய்யும் விடயங்களைக் குறிக்கிறது. பின்னர் முகஸ்துதியாளர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டணை குறித்து தெரிவிக்கிறார்கள். முகஸ்துதியாளர்களுக்கான தண்டனை யாதெனில், 'யாருக்காக நீங்கள் அமல்களை செய்தீர்களோ அவர்களிடமே இன்று செல்லுங்கள், அவர்கள் அதற்கான கூலியை வழங்குவதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ளனரா என்று பாருங்கள்' என்று அவர்களிடம் கூறப்படும்.

Hadeeth benefits

  1. அமல்களை-செயற்பாடுகளை- அல்லாஹ்வுக்கு இதயசுத்தியுடன் 'இஹ்லாஸாக' செய்வதும், முகஸ்துதியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதும் கடமையாகும்.
  2. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்தின் மீது கொண்ட அதீத கருணை மற்றும் அவர்களை நேர்வழிப்படுத்திடவும், அவர்களுக்கு நலன் நாடுவதிலும் கொண்ட அக்கறையையும் இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றமை.
  3. முகஸ்துதி பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பயமானது ஸஹாபாக்களின் மீதிருந்தது, அவர்களோ சான்றோர்களின் மிகப்பெரும் தலைவர்களாக இருந்தார்கள். இந்த வகையில் அவர்களுக்குப் பின் வந்தோர் பற்றி அதிகம் பயப்பட வேண்டிய தேவை உள்ளது.