- இறைவிதியை ஈமான் கொள்வது கடமையாகும்.
- 'அல் கத்ர்' என்பது சிருஷ்டிகள் பற்றிய அல்லாஹ்வின் ஆழமான அறிவையும், அவை தொடர்பான அவனின் பதிவையும் நாட்டத்தையும், படைப்பையும்-உருவாக்கத்தையும்- குறிக்கும்.
- வானங்கள்,பூமி படைக்கப்பட முன்னரே விதிகள் எழுதப்பற்றிருப்பதை ஈமான் கொள்வதானது உளத்திருப்தி , முழுமையாக இறைவனுக்கு கட்டுப்படுதல் போன்ற விடயங்களை மனிதனில் ஏற்படுத்தும்.
- வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட முன்னரே அர்ரஹ்மானின் அரியணை (அர்ஷ்) நீரின் மீது இருந்ததது என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.