- சுவர்க்கமும், நரகமும் தற்போதும் உள்ளது என ஈமான் கொள்ளுதல்.
- மறைவானவற்றையும்,அல்லாஹ்விடமிருந்தும் ; அவனின் தூதரிடமிருந்தும் வழிகாட்டல்கள் என வந்தவற்றையும் ஈமான் கொள்வது கடமை.
- சுவர்கத்தின் பால் இட்டுச்செல்லும் காரணியாக இன்னல்கள் இருப்பதால் அதில் பொறுமையை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
- நரகத்திற்கு வழிவகுக்கும் காரணியாக தடைசெய்யப்பட்டவை இருப்பதால் அவற்றிலிருந்து விலகி நடப்பதன் அவசியம். குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
- சுவர்க்கம் இன்னல்களாலும் நரகம் இச்சைகளாலும் சூழப்பட்டதாக இருப்பது, உலக வாழ்வின் சோதனைக்கான அடிப்படையாகும்.
- சுவர்க்கத்திற்கான பாதை கடினமும் சிரமும் நிறைந்தது, அதற்கென நம்பிக்கையுடன்(ஈமானுடம்) பொறுமை மற்றும் இன்னல்களை அனுபவித்தல் என்பனவும் அவசியம். மேலும், நரகத்திற்கான பாதை இந்த உலகின் இன்பங்களாலும் ஆசைகளாலும் நிறைந்தது.