- வுழூவுடன் காலுறை அணிந்திருந்து சிறு தொடக்கு ஏற்பட்டால், அவர் வுழூ செய்யும் போது அதன் மீது மஸ்ஹ் செய்வது ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும். ஆனால் பெருந்தொடக்கு ஏற்பட்டால் அவர் இரு கால்களையும் கழுவுவது அவசியமாகும்.
- காலுறையின் மீது மஸ்ஹ் செய்வது என்பது ஈரக்கையால் காலுரையின் கீழ் பகுதியல்லாது மேல் பகுதியை தடவிடுவதாகும்.
- காலுறையின் மீது மஸ்ஹ் செய்வற்கு சில நிபந்தனைகள் உண்டு. அவைகளாவன: குறிப்பிட்ட காலுறையை முழுமையான முறையில் வுழு செய்ததன் பின் அணிந்திருத்தல் வேண்டும். காலுறையானது சுத்தமாக இருப்பதோடு, வுழுவின் போது கட்டாயம் கால் பகுதியில் கழுவவேண்டிய இடத்தை மறைக்கக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும். மஸ்ஹானது சிறு தொடக்குக்கிற்கு உரியதேயன்றி ஜனாபத் மற்றும் அவசியம் குளிக்க வேண்டிய விடயங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் மஸ்ஹுக்குரிய காலப்பகுதி வரையறுக்கப்பட்டதாகும். அந்தவகையில் ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாட்களுமாகும்.
- 'குப்'பின் அளவுகோளுக்கு அமைவாக இருக்கும் காலுறை போன்ற இரு கால்களையும் மறைக்கக் கூடியவை அனைத்தின் மீதும் மஸ்ஹ் செய்வது அனுமதிக்கப்படும்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நற்குணமும் அவர்களின் அழகிய கற்பித்தல் பண்பும் தெளிவாகிறது. அன்னார் முகீராவை இரு பாதணிகளையும் கழட்டுவதை விட்டு தடுத்தது இதனை தெளிவு படுத்துகிறது. அவர்கள் தான் வுழுவுடன் அணிந்துள்ளதாகக் கூறி அவரை சமாதானப்படுத்தி அதன் சட்டத்தையும் தெளிவு படுத்தியமை அவர்களின் அழகிய வழிமுறையை எடுத்துக்காட்டுகிறது.