- அதான் கூறுபவரின் அதானுக்கு பதில் கூறுமாறு வலியுறுத்தல் .
- அதான் கூறுபவரின் அதானுக்கு பதில் கூறிய பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்வதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.
- நபி மீது ஸலவாத் கூறியதை தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக வஸீலாவை கேட்குமாறு வலியுறுத்தல்.
- வஸீலா என்பதன் கருத்தும் அதன் மேன்மையும், அப்பதவியானது ஒரு அடியாருக்கு மாத்திரமே உரியது என்பது பற்றி விபரித்திருத்தல்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அந்த உயர்ந்த பதவிக்கு தனித்துத் திகழ்ந்ததால் அவர்களின் சிறப்பை விளக்குதல்.
- யார் அல்லாஹ்விடம் நபியவர்களுக்கு வஸீலாக் கிடைக்க பிரார்த்திக்கிறாரோ அவருக்கு நபியவர்களின் ஷபாஅத் -பரிந்துரை- மறுமையில் கிடைக்கும்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பணிவை விளக்குதல், அன்னார் அவ்வுயர் பதவி தனக்குக் கிடைக்குமென்றிருந்தும் அது தனக்குக் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்குமாறு தனது சமூகத்திடம் பிரார்த்திக்குமாறு வேண்டியுள்ளார்கள்.
- ஒரு நன்மைக்கு அதே போன்ற பத்து நன்மைகள் உண்டு என்ற நபியவர்களின் வாக்கு அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணையின் எல்லையற்ற தன்மையை காட்டுகிறது.