/ 'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'

'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'.

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்களை அராக் மரக் குச்சியினால் அல்லது அது போன்றவைகளினால் சுத்தம்செய்வது வாயிலுள்ள அழுக்குகள், துர் வாடை ஆகியவற்றை நீக்கி வாயை சுத்தப்படுத்தும் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். பல்துலக்குவதில் அல்லாஹ் விரும்பும் சுத்தமும், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, அவனின் ஏவலுக்கு கீழ்படிவதும் இருப்பதால், அடியான் இறை திருப்தியை பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.

Hadeeth benefits

  1. பல் துலக்குவதன் சிறப்பும், அதிகம் பல் துலக்குமாறு நபியவர்கள் தனது சமூகத்திற்கு ஆர்வமூட்டியுள்ளமையும்.
  2. அராக் மரக் குச்சியியை பல்துலக்குவதற்கு பயன்படுத்து மிகவும் சிறப்பாகும். எனினும் இதற்காக பற்தூரிகை, பற்பசை போன்றவற்றையும் பயன்பத்திடவும் முடியும்.