- ஒரு பெண் தனது மாதவிடாய் நாட்கள் முடிவடையும் போது குளிப்பது கடமையாகும்-வாஜிபாகும்.
- தொடர் உதிரப்போக்கால் பாதிக்கப்பட்ட பெண் தொழுவது கடமையாகும்.
- ஹைழ் என்பது; வயதுவந்த ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதிகளுள் ஒன்றான கருப்பையிலிருந்து யோனியினூடாக வெளிப்படும் இயற்கையான குருதியாகும். இது மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்கள் அவளுக்கு ஏற்படுகிறது.
- 'இஸ்திஹாழா' என்பது கருப்பையின் அடிப்பகுதியில் அல்லாது அதன் வாய்ப்பகுதியில், மாதவிடாய் காலப்பகுதியல்லாத நேரங்களில் அல்லது மாதவிடாய் காலப்பகுதியுடன் இணைந்து ஏற்படும் உதிரப்போக்காகும்.
- ஹைழ் (மாதவிடாய்) மற்றும் இஸ்திஹாழா(தொடர்உதிரப்போக்கு) இடையிலான வேறுபாட்டைப் பொறுத்தவரை ஹைழ் இரத்தமானது கருமையும், அடர்த்தியும் நிறைந்தாக இருப்பதோடு துர் நாற்றமும் காணப்படும். இஸ்திஹாழா இரத்தமானது அடர்த்தியற்ற சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு அதற்கென்று துர்நாற்றங்கள் காணப்படமாட்டாது.