- இந்த ஹதீஸானது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் சட்டவாக்க விதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்ற ' இடையில் ஏற்பட்ட ஒரு சந்தேகம் ஏலவே உள்ள உறுதியான முடிவை மாற்றாது' என்ற விதியை உள்ளடக்கியுள்ளது. அடிப்படை-மூலம் என்பது அதற்கு முரணான ஒன்று உறுதியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் அதே நிலையில் இருக்கும்.
- தொழுபவர் தனக்கு தொடக்கு ஏற்படவில்லை என்ற உறுதியோடு இருக்கும் வரையில் சந்தேகம் வுழு முறியாது தூய்மையாக இருத்தல் என்பதில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திட மாட்டாது.