- ஸுறா பாத்திஹாவை அஸ்ஸலாத் (தொழுகை) என்ற பெயரால் அல்லாஹ் அழைத்திருப்பது இந்த ஸுறா பெற்றுள்ள உயர் அந்தஸ்த்தை எடுத்துக் காட்டுகிறது.
- அடியான் தன்னை புகழ்ந்து பாராட்டி கண்ணியப் படுத்துவதன் காரணமாக அல்லாஹ் அவனை புகழ்வதுடன் அவன் கேட்டதை கொடுப்பதாக வாக்களித்திருப்பது தனது அடியானுடனான அல்லாஹ்வின் அதீத கரிசனையை தெளிவு படுத்துகிறது.
- இந்த ஸுறாவானது அல்லாஹ்வை புகழ்தல், மறுமை நாள் பற்றி குறிப்பிட்டிருத்தல், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல், வணக்கத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றல், நேரான பாதைக்கு வழிகாட்டுமாறு இறைஞ்சுதல், அசத்திய வழிகளில் செல்வதை விட்டும் எச்சரிக்கை செய்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
- தொழுபவர் ஸுறா பாத்திஹாவை ஓதுகையில் இந்த ஹதீஸை உணர்பூர்வமாக சிந்தித்தால் தொழுகையில் அவரின் பணிவு அதிகரிக்கும்.