/ 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'...

'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு கூறுகின்றார்கள் : 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

பெரும்பாவங்களை விட்டும் விலகியிருக்கும் காலமெல்லாம், தினமும் நிறைவேற்றும் ஐவேளை தொழுகைகளும், ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றும் ஜும்ஆத் தொழுகையும், ஒவ்வொரு வருடமும் ரமழானில் நோற்கும் நோன்பும் சிறிய பாவங்களுக்கான பரிகாரமாக அமைந்து விடுகின்றன என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். விபச்சாரம், மது அருந்துதல் போன்ற பெரும்பாவங்களைப் பொருத்தவரை தவ்பா –பவாமீட்சி- கோருவதே அதற்குரிய பரிகாரமாக அமையும்.

Hadeeth benefits

  1. பாவங்கள் பெரியவை, சிறியவை என இரு வகைப்படுகின்றன.
  2. சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பெரிய பாவங்களிருந்து தவிர்ந்திருப்பது நிபந்தனையாகும்.
  3. பெரும்பாவம் என்பது உலகில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டவை அல்லது மறுமையில் தண்டனை இருப்பதான எச்சரிக்கை அல்லது இறை கோபம் அல்லது கடுமையான எச்சரிக்கை அல்லது மது அருந்துதல் விபச்சாரம் போன்ற செயல்களை செய்தோருக்கு இறை சாபத்தை பெற்றுத்தரும் செயல்களைக் குறிக்கும்.