- தொழுகையில் ஏழு உறுப்புகளினால் ஸுஜூத் செய்வது வாஜிபாகும்.
- தொழுகையில் ஆடை மற்றும் முடியை சேர்த்துப் பிடித்துக்கொள்வது விரும்பத்தகாத விடயமாகும்.
- ஸுஜூதின் ஏழு உறுப்புகளையும் பூமியில் வைப்பதன் மூலம் தொழுபவர் தொழுகையில் நிதானம் பேணி அமைதியாக தொழுவது வாஜிபாகும்.அத்துடன் அதில் ஓதப்படவேண்டிய திக்ரை கூறும் வரை தரித்திருப்பது அவசியமாகும்.
- முடிகளை தரையில் படாதாவாறு பிடித்துக்கொள்வது தடுக்ப்பட்டிருப்பது பெண்களுக்கன்றி ஆண்களுக்குரிய குறிப்பான கட்டளையாகும்;. இது பெண்களுக்குரியதன்று ஏனெனில் அவர்கள் தொழுகையில் தலையை மறைக்குமாறு ஏவப்பட்டிருக்கிறார்கள்.