/ 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறின...

'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறின...

அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லஹ்வின் தூதரே ஐவேளைத் தொழுகைகளுக்கு என்னை பள்ளிவாயிலுக்கு அழைத்து வர எனக்கு உதவியாளர் எவரும் இல்லை என்று முறைப்பட்டார்கள். அதாவது அவர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஜமாஅத்துடன் தொழாது தனித்து வீட்டிலேயே தொழுவதற்கு சலுகை தருமாறு வேண்டிக்கொள்ளவே அதற்கான அனுமதியை வழங்கினார்கள். பின் அவர் திரும்பி செல்லவே அவரை அழைத்து தொழுகைக்கான அதான் -அழைப்புச் சத்தம் உமக்குக் கேட்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என அவர் பதில் கூற, அவரிடம் தொழுகையின் அழைப்பாளருக்கு பதிலளிப்பீராக அதாவது பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொள்வீராக என்று கூறினார்கள்.

Hadeeth benefits

  1. கூட்டுத் தொழுகை –ஜமாஅத் தொழுகை- கடமையாகும். காரணம் சலுகை என்பது கடமையான ஒரு விடயத்திற்காகவன்றி வேறு எதற்கும் கிடையாது.
  2. நபியவர்கள் அதான் சப்தத்தைக் கேட்வபருக்கு 'ஃபஅஜிப்' அதாவது பதிலளிப்பீராக என வேண்டிக் கொண்டது ஜமாஅத் தொழுகை வாஜிப் -கடமை என்பதை காட்டுகிறது. அடிப்டையில் மார்க்க விவகாரம் சம்பந்தமாக ஏவல் வினையைப் பயன்படுத்தி ஒன்றைக் குறிப்பிட்டால் அது கடமை என்பதைக் காட்டும்.