- உள்ளத்தின் நிலை, அதன் குணங்களில் கவனம் செலுத்தி, அனைத்து வித மோசமான பண்புகளை விட்டும் உள்ளத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்.
- உள்ளத்தின் சீர்மை உளத்தூய்மையில் உள்ளது, செயற்பாட்டின் சீர்மை நபியவர்களைப் பின்பற்றுவதில் உள்ளது. இவை இரண்டும் தான் அல்லாஹ்வின் அவதானத்திற்கும் பார்வைக்கும் உட்படுகின்ற மிகப்பிரதானமான விடயங்களாகும்.
- மனிதன் தனது செல்வத்தினாலோ அழகினாலோ, உடற்கட்டமைப்பினாலோ, இவ்வுலகின் வெளிப்பாடுகளில் ஏதாவது ஒன்றினாலோ ஏமாந்திடலாகாது
- உள்ரங்க விடயங்களை சீர்செய்வதை தவிர்த்து வெளிப்படையான விடயங்களை செய்வதில் ஆர்வம் கொள்வது எச்சரிக்கப்பட்டிருத்தல்.