- குடும்பத்திற்கு செலவு செய்வதினால் கூலியும் நன்மையும் கிடைத்தல்.
- ஒரு முஃமின் தனது செயற்பாடுகளில் (அல்லாஹ்வின் இன்முகம் நாடி) அல்லாஹ்வையே நோக்காகக் கொள்வதுடன், அவனின் கூலியையையும் நன்மையும் எதிர்பார்த்திருப்பான்.
- ஓவ்வொரு செயற்பாடுகளிலும் தூய்மையான எண்ணத்தைப் பிரதிபளிப்பது அவசியமாகும். குடும்பத்திற்கு செலவு செய்யும்போது இவ்வெண்ணத்தைக் கொள்வது அவற்றில் ஒன்றாகும்.