'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
விளக்கம்
தர்மம் செய்வதினால் செல்வம் குறைந்து விடாது, மாறாக அது ஆபத்திலிருந்து பாதுகாக்கும் என்பதாகவும், மேலும் அல்லாஹ் தர்மம் செய்யும் மனிதருக்கு மிகப்பெரும் பாக்கியத்தை பகரமாக வைத்துள்ளான், ஆகவே அது அவனது செல்வத்தின் அதிகரிப்பே தவிர அவனது செல்வம் குறைந்துவிட்டது என்பது அர்த்தமல்ல எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவு படுத்துகிறார்கள்.
தண்டிப்பதற்கு அல்லது பலிவாங்குவதற்கு பலமிருந்தும் பிறரை மன்னிப்பது அவனது சக்தியையும் கண்ணியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
எவருக்கும் பயப்படாது, அனுதாபப்படாது மற்றவரின் நலனை எதிர்பார்த்தோ அல்லாமல் அல்லாஹ்வின் திருமுகம் நாடி பணிந்து நடப்பவனுக்குரிய கூலி உயர்வையும் கண்ணியத்தையும் தவிர வேறில்லை.
Hadeeth benefits
பிற மனிதர்கள் தப்பெண்ணங்கொண்டாலும் நன்மையும், வெற்றியும் மார்க்கத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதிலும் நல்லது செய்வதிலுமே உள்ளது.
Share
Use the QR code to easily share the message of Islam with others