/ 'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்...

'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்...

இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நான் மூல நோயினால் பீடிக்கப்பட்டிருந்தேன். எனவே தொழுகை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினேன். அதற்கு நபியவர்கள்: 'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

நின்ற நிலையில் தொழுவதுதான் தொழுகையின் அடிப்படை என்பதை நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். எனவே அவ்வாறு நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும், அதுவும் முடியாவிட்டால் சாய்ந்து தொழ முடியும்.

Hadeeth benefits

  1. ஒருவருக்கு சுயபுத்தி இருக்கும் வரையில் அவருக்கு தொழுகை என்ற கடமை நீங்கி விடமாட்டாது. எனவே ஒருவரின் இயலுமைக்கேட்ப அவர் ஒவ்வொரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வார்.
  2. வணக்கவழிபாடுகளில் தனது சக்திக்குட்பட்ட வற்றை செய்வது இஸ்லாத்தின் இலகு தன்மைக்கும், பெருந்தன்மைக்குமான எடுத்துக்காட்டாகும்.