- அண்டை வீட்டாரின் உரிமையின் மேன்மையும், அதில் கரிசனை செலுத்துவதன் அவசியமும் கடமையும் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.
- உபதேசம் செய்து அவர்களின் உரிமையை வலியுறுத்துவதானது அவர்களை மதித்து, நேசித்து, உபகாரம் புரிதல், ஆபத்துக்களைத் தடுத்தல், நோயாளியாக இருக்கும் போது நலம் விசாரத்தல், மகிழ்வுறும் விடயங்களின் போது வாழ்த்துதல், துன்பங்களின் போது ஆறுதல் கூறுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்துகின்றது.
- அயலவரின் வீட்டுவாயிலின் நெருக்கத்திற்கேட்ப அவர்களுக்கு செலுத்தவேண்டிய கடமை மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும்.
- மாரக்கம் கொண்டுவந்த சட்டதிட்டங்களின் பூரணத்துவம் இந்த ஹதீஸில் பிரதிபளிப்பதை இங்கு காணமுடிகிறது. அதாவது மார்க்கம் வழங்கியுள்ள சட்டதிட்டங்களில் சமூக நலன் காணப்படுகிறது.